16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

விசேடமாக, 15 மாவட்டங்களில் உள்ள 52 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் வறட்சியான காலநிலையினால் ஏற்பட்ட குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 54,979 குடும்பங்களைச் சேர்ந்த 183,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வடமாகாணத்தில் மாத்திரம் 75,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 70,238 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று வியாழக்கிழமை (17) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க, குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 52,400 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.





நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு