25,Nov 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் கடும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரைதேடி சென்று விபத்தில் இறக்கும் விலங்குகள்

மட்டக்களப்பு மாவாட்டம் மண்மனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கால்நடைகள் உன்னிச்சை - மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாக தினசரி குடிநீருக்காகவும் உணவுக்காகவும், அலைந்து திரிவதனால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன.

இந்நிலையில், செவ்வாய்கிழமை (22) உன்னிச்சை பிரதான வீதியில் அரிய வகை மர அணில் ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்ததையும் அவதானிக்க முடிந்தது. 

அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் கால்நடைகளுக்கு வேண்டிய குடிநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க உடன் முன்வர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு, நிலவும் கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 1,800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

வாகரை வடக்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு, உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள தங்களது விவசாயச் செய்கை, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட வாழ்வாதார தொழில்களும் வரட்சியினால் பெரிதும், பாதிக்கப்பட்டுள்ளன.




இலங்கையில் கடும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரைதேடி சென்று விபத்தில் இறக்கும் விலங்குகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு