14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு மிகவிரைவில் நீதி வழங்கப்படும்- காணாமல்போனவர்கள் அலுவலகம்

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு அடுத்த ஆறுமாதங்களில் நீதிவழங்கப்படும்என காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களை தேடும் பொறிமுறையை துரிதப்படுத்தியுள்ளதாகவும் இந்த செயற்பாடுகள் வெளிப்படையாக இடம்பெறுவதாகவும் காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.


உலகின் வேறு எந்த நாட்டையும் விட இலங்கையில் குறிப்பிட்ட செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போன தனிநபர்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணையின் முதற்கட்டத்தினை டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணைகள் பூர்த்தியானதும் காணாமல்போனவர்கள் சான்றிதழ் அல்லது மரணச்சான்றிதழை பெற விரும்பும் குடும்பத்தவர்களுக்கு அது கையளிக்கப்படும் எனவும் காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இழப்பீட்டை பெறவிரும்புபவர்கள் இழப்பீடு தொடர்பான அலுவலகத்தின் மூலம் இழப்பீட்டை பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ள மகேஸ் கந்துல காணாமல்போனவர் அலுவலகத்தின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து இந்த இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விசேட வசதிகளை வழங்குவோம் என தெரிவித்துள்ள அவர் காணாமல்போனவர்களின் உறவுகளில் சிலர் சிறுநீரக கிசிச்சை இருதயநோய் சிகிச்சை போன்றவற்றிற்காக காத்திருக்கின்றனர் அவர்களிற்கு விசேட வசதிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



அவ்வாறான குடும்பங்களில் கல்விகற்க்கும் ஆர்வம் உள்ள சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்கு மேலதிக கல்வியை அல்லது சுயதொழிலுக்கான திறனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் காணாமல்போனதால் பொருளாதார ரீதியில் சிதைவடைந்த எந்த குடும்பத்தினதும் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப உதவ தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 14,988 எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 கடந்த ஐந்துவருடங்களில் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு மிகவிரைவில் நீதி வழங்கப்படும்- காணாமல்போனவர்கள் அலுவலகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு