20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மட்டக்களப்பு பிரதான கொழும்பு புணானை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஆசிரியர் மரணம்

மட்டக்களப்பு பிரதான கொழும்பு புணானை வீதியில் புதன்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பரிகாரியார் வீதி ஓட்டமாவடியைச் சேர்ந்த ஸர்பராஸ் ஹிசை முகம்மது அஸாம் வயது (25) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

றிதிதென்னையில் வசிக்கும் தனது தந்தையாரை சென்று பார்த்து விட்டு தமது நண்பருடன் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வரும்போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி எதிரே வந்த தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்க்ப்பட்டுள்ளது.

காயமுற்றவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்





மட்டக்களப்பு பிரதான கொழும்பு புணானை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஆசிரியர் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு