08,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

கொரோனா நோயால் 7,711 பேர் பாதிப்பு- இந்திய விமானங்கள் ரத்து

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 132 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் புதிதாக 1737 பேரை தாக்கி உள்ளது. தற்போது 7 ஆயிரத்து 771 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 1370 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 12 ஆயிரத்து 167 பேருக்கு நோய் தாக்குதல் அறிகுறிகள் உள்ளன. நோய் தாக்குதலுக்கு ஆளாகியவர்களில் 124 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இவர்கள் தவிர நோய் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 88 ஆயிரத்து 693 பேர் தனியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 2 ஆயிரத்து 364 பேர் நோய் அறிகுறி இல்லை என்பதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். நோய் பாதிப்பு அங்குள்ள ஹூபெய் மாகாணத்தில் தான் மிக மோசமாக உள்ளது. அந்த மாகாணத்தின் தலைநகரம் உகான் உள்பட பல இடங்களிலும் நோய் பரவி வருகிறது. 

தலைநகரம் பீஜிங், வர்த்தக தலைநகரம் ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தனி நாடுகளான ஹாங்காங், மகாவ் ஆகியவற் றிலும் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. ஹாங்காங்கில் 10 பேரும், மகாவ்வில் 7 பேரும் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பக்கத்து நாடான தைவானிலும் நோய் பரவி விட்டது. அங்கு 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு சீன அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக கூடக்கூடாது, பொழுது போக்கு இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியமான பயணத்தை தவிர மற்ற பயணங்களை மேற்கொள்ள கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுபற்றி கூறும்போது, சீன நாட்டில் பேரழிவு ஏற்படுத்தும் அரக்கனாக இந்த நோய் உருவாகி உள்ளது. இதை கண்டிப்பாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இந்த விஷயத்தில் அரசு எல்லா வகையிலும் வெளிப்படையாக செயல்படும் என்று கூறியுள்ளார்.


நோய் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வசித்து வரும் வெளிநாட்டினருக்கும் நோய் தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் உள்ளனர். எனவே வெளிநாட்டினரை அங்கிருந்து அழைத்து வர அனைத்து நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால் சீனா அவர்களை அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு தலா ஒரு விமானம் நோய் பாதிப்பு உள்ள உகான் நகரில் இருந்து சென்றுள் ளன. அவற்றில் ஜப்பான் பயணிகள் 206 பேரும், அமெரிக்க பயணிகள் 210 பேரும் வெளியேறி இருக்கிறார்கள்.

இதேபோல இந்தியாவை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் அங்கு உள்ளனர். இதேபோல இங்கிலாந்து பிரான்ஸ், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மங்கோலியா, தென்கொரியாவை சேர்ந்த வர்களும் அதிகமாக உள்ளனர். அவர்களை அழைத்து செல்ல அந்த நாடுகள் சீன அரசை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றன. சீனாவில் மட்டும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் 21 ஆயிரம் பேர் மருத்துவ மாணவர்கள்.

நோய் தாக்குதல் அதிகமாக பரவி உள்ள உகான் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 700 மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக அழைத்து வருவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 2 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீன அரசு அனுமதி கொடுத்ததும் அந்த 700 பேரையும் அழைத்து வருவார்கள்.ஆனால் உலக சுகாதார நிறுவனம் இது சம்பந்த மாக ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் சீனாவில் இருக்கும் வெளிநாட்டினரை யாரும் அழைத்து செல்வ தற்கு முயற்சி செய்ய வேண்டாம். அது வெளிநாடுகளில் நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிடும். சீன அரசே அதை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளது. இதனால் சீன அரசும் அங்குள்ள வெளிநாட்டினரை அவர்களது நாடுகளுக்கு அனுப்புவதற்கு விரும்பவில்லை. ஆனாலும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்கிடையே இந்தியாவில் இருந்து சீனா செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து டெல்லி வழியாக ஷாங்காய்க்கு விமானத்தை இயக்கி வந்தது. இந்த விமானத்தை ஜனவரி 31-ல் இருந்து பிப்ரவரி 14 வரை ரத்து செய்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் பெங்களூரில் இருந்து ஹாங்காங்குக்கும், டெல்லியில் இருந்து ஜெங்டு நகருக்கும் விமானங்களை இயக்கி வந்தது. அவற்றை பிப்ரவரி 1-லிருந்து 20-ந்தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பிரிட்டீஷ் ஏர்வேஸ், இந்தோனேஷியாவின் லைன் ஏர்வேஸ் மற்றும் நேபாளம், மியான்மர் நாடுகளும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

சீனாவின் அண்டை நாடான கஜகஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே ரெயில் போக்குவரத்து இருந்தது. அதை ரத்து செய்வதாக கஜகஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் நோய் பரவி விடாமல் தடுப்பதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை சிறப்பு செலாளர் சஞ்சீவகுமார் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களையும் வீடியோ கான்பரன்சிங்கில் அழைத்து இது சம்பந்தமாக உரிய அறிவுரைகளை வழங்கினார்.

நாட்டில் உள்ள 21 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு அனைத்து மருத்துவ முன்னேற்பாடுகளையும் செய்யும்படியும் அவர் உத்தர விட்டார். குறிப்பாக நேபாள எல்லையில் உள்ள உத்தர காண்ட், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம், சிக்கிம் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி உத்தர விடப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களும் தனியாக சிறப்பு வார்டுகளை தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எங்காவது நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக ரத்த மாதிரிகளை சேமித்து புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கப்பலில் வரும் பொருட்கள் மூலமாக நோய் பரவி விடக்கூடாது என்பதற்காக 12 பெரிய துறைமுகங்கள், 204 சிறிய துறைமுகங்கள் ஆகியவற்றிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களையும் பரிசோதனைக்கு பிறகே இறக்குமதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கப்பல் ஊழியர்கள், பயணிகளுக்கு கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

 





கொரோனா நோயால் 7,711 பேர் பாதிப்பு- இந்திய விமானங்கள் ரத்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு