15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சியில் இராணுவமுகாமை அகற்ற வேண்டாம் என மக்கள் போராட்டம்

கிளிநொச்சி அக்கறையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் இன்றையதினம் 01.09.2023 கிளிநொச்சியில் நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது இராணுவ முகாமின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி இந்த கவனயிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது அவர்கள் தெரிவிக்கையில்

தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும், தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினை இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப்பெறுவதாகவும் தமது பகுதிகளில் நடைபெறும் மரண நிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும் அத்துடன் தமது பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக இதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிற்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அக்கறையான் பெலிசாருக்கு பலமுறை தெரிவித்தாலும் அவர்கள் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் எனவே இப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி கவனயீர்பு போராட்டத்தை மேற்கொண்டனர்




கிளிநொச்சியில் இராணுவமுகாமை அகற்ற வேண்டாம் என மக்கள் போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு