21,Nov 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை -மசோதாவை நிறைவேற்றி உள்ளது ஈரான்

இந்த மசோதாவின் விதிகளின்படி, பொது இடங்களில் "தகாத முறையில்" உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். 


இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த மசோதா அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என்று கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இந்த ஹிஜாப் மசோதா 152-க்கு 34 என்ற பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் பெண் டிரைவர் அல்லது பயணிகள் ஆடைக்கட்டுப்பாட்டை மீறினால் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் மூலம் மறைக்க வேண்டும். அவர்களின் உடலை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. முறையற்ற ஹிஜாப் அணிந்ததற்காக பொலிசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாஷா அமினி மரணம் தொடர்பாக எதிர்ப்புக்கள் வெடித்த ஒரு வருடத்திற்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை -மசோதாவை நிறைவேற்றி உள்ளது ஈரான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு