12,Mar 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று (22 ) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். 

ஓமந்தையில் வெதுப்பகம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேரூந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி. தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு