22,Dec 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை நிறைவு செய்து நாடு திரும்பிய ஜனாதிபதி

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை நிறைவு செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நாளை செவ்வாய்கிழமை (26) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த மார்ச்சில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கமைய பல்வேறு பொருளாதார மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தொடர்பில் நாணய நிதியத்தின் மீளாய்வு கடந்த வாரம் ஆரம்பமாகியிருந்தது. அதற்கமைய இதுவரை நாணய நிதியத்தின் மீளாய்வு நேர்மறையாகவே இடம்பெற்று வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இந்நிலையிலேயே நாளை முதற்கட்ட மீளாய்வு குறித்த இறுதி பேச்சுவார்த்தை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ளது. பல சவால்களுக்கு மத்தியிலும் நாணய நிதியத்தின் பல நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இதுவரையில் நிறைவடைந்துள்ள பேச்சுவார்த்தைகள் நேர்மறையாகவே நிறைவடைந்துள்ளன. இறுதி பேச்சுவார்த்தைகளையும் அவ்வாறே நிறைவடைய செய்ய முடியும் என்று நம்புவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.



எவ்வாறிருப்பினும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் சாகல ரத்நாயக்க, நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் இவ்வாரம் கையெழுத்திடப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை நிறைவு செய்து நாடு திரும்பிய ஜனாதிபதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு