சட்டவிரோத குடியேற்றவாசிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.லொறியொன்றின் பின்பகுதியில் இவர்கள் காணப்படுவதை அறிந்த பிபிசி பிரான்ஸ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
லொறிக்குள் சிக்குண்டிருந்த அச்சத்துடன் சுவாசிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த நான்கு வியட்நாம் பெண்களும் இரண்டுஈராக் பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் ஆள்கடத்தல் கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது. புதன்கிழமை எனது கையடக்க தொலைபேசிக்கு செய்தியொன்று வந்தது.அதில் இங்கிலாந்திலிருந்து பிரான்சிற்குள் நுழைந்துள்ள சிலர் குளிரூட்டப்பட்ட வானில் உள்ளனர் என்ற செய்தி காணப்பட்டது. நான் அந்த செய்தியை வாசிப்பதற்குள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
நீங்கள் ஐரோப்பாவில் இருக்கின்றீர்களா? தயவு செய்து எங்களிற்கு உதவுங்கள் அவசரம் என பதற்றத்துடன் அந்த குரல் தெரிவித்தது.
நான்; அச்சத்தில் சிக்குண்டேன் -2019இல் எசெக்சில் குளிரூட்டப்பட்ட வாகனத்துடன் இணைக்கப்பட்ட பின்பகுதியில் 39 குடியேற்றவாசிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது எனது மனதில் இன்னமும் அழியாமல் இருந்தது.
என்னை அழைத்தவர் யார் என்று தெரியாது ஆனால் நான் 2019 சம்பவத்தை பற்றி செய்தி எழுதியதை நினைவில் வைத்திருக்கின்றவராக இருக்கவேண்டும் - அந்த வேளை வியட்நாமை சேர்ந்த பலர் என்னை தொடர்புகொண்டனர்.
நான் என்னை தொடர்கொண்டவரை சில கேள்விகள் கேட்டேன் ஆனால் உரிய தகவல்களை பெற முடியவில்லை.
லொறியொன்றில் ஆறு பேர் மறைந்திருக்கின்றனர்- வாகனத்தின் இலக்கதகடு தெரியாது எங்குநிற்கின்றது எங்கு செல்கின்றது என்பதும் தெரியாது.
என்னை அவர் அழைத்ததை அடிப்படையாக வைத்து அந்த வாகனம் பிரான்சில் உள்ளது என்பதை என நான் கருதினேன் ஆனால் அந்த வாகனம் தற்போது இங்கிலாந்து எல்லையை நோக்கி செல்லவில்லை என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன்.
ஆறுபெண்கள் உள்ளே உள்ளனர் ஏசியை போட்டுள்ளனர் உள்ளே கடும் குளிராக உள்ளது அவர்கள் அச்சத்தில் உள்ளனர் என்பதையும் நான் அறிந்துகொண்டேன் .
ஆனால் அவர்கள் வெளி உலகுடன் தொடர்புகொள்ளும் நிலையில் இருந்தனர்.அவர்களில் ஒருவர் என்னுடன் தொடர்புகொண்டார்-உள்ளே மிகவும் குளிராக உள்ளது என வாழைப்பழங்கள் ஏற்றப்பட்ட வாகனத்திலிருந்து பெண் ஒருவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.
அவர்கள் உள்ளே இருப்பதை காண்பிக்கும் வீடியோவையும் அவர் அனுப்பினார்-ஒரு வீடியோ இருளான பகுதியையும் பழங்கள் அடுக்கப்பட்ட பெட்டிகளையும் அவர்கள் அமர்வதற்கான சிறிய இடத்தையும் காண்பித்தது.
0 Comments
No Comments Here ..