அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அவர் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் காரணமாக, தனுஷ்க குணதிலக இலங்கை திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அத்துடன், இந்த தீர்ப்பினால் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கம் விதித்திருந்த தடையும் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதேவேளை, தனுஷ்க குணதிலகவின் வழக்குக்காக செலவிடப்பட்ட பணம் அனைத்தும் அவரிடமிருந்து தற்போது வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட், சர்வதேச கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவதூறு செய்யும் வகையில் மனுதாரருக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருந்துள்ளதாக தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..