17,Sep 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுமளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது- எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டின் நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகித்து வருவது பாராளுமன்றமாகும். அதனால் சட்டத்தின் சுயாதீனத்தை பாதுகாக்காதவரை முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரப்போவதில்லை.

அத்துடன் முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு அவருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பதவி விலகி இருக்கிறார். நீதிபதிகள் இவ்வாறு பதவி விலகும் நடவடிக்கைகள் இடம்பெறுவது சாதாரணமாகும்.

ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு நீதிபதி ஒருவர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பது வரலாற்றில் இதுவே முதல்தடவையாகும். இது பாரதூரமான விடயமாகும்.


அத்துடன் நீதிமன்றத்துக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பது பாராளுமன்றமாகும். நீதிமன்ற சுயாதீனத்தன்மை பாதிக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபாேது, அதுதொடர்பாக நீதிமன்றம் எந்த தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது என இந்த பாராளுமன்றமே உத்தரவிட்டது.

அத

ேபோன்று முன்னாள் பிரதம நீதி அரசர் சிராணி பண்டாரநாயக்க திவுனெகும திட்டத்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்காததால் அவருக்கு எதிராக பாராமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவந்து அவரை பதவியில் இருந்து நீக்கி இருந்தது.

தேபோல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அரசாங்கம் தேர்தலை நடத்த பணம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்தது.

அத்துடன் தேர்தலை பிற்போட்டமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்பட்டு 8மாதங்கள் ஆகியும் இன்னும் அதுதொடர்பான விசாரணை முடிவுக்கு வராமல் இருக்கிறது. சட்டத்தின் பிரகாரம் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு விசாரணை 2மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.

மேல

ும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை நிராகரிக்கச்செய்ய பாராளுமன்ற குழுவில் தீர்மானித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

ஆனால் அதற்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை. அவ்வாறு வேட்புமனுகளை நிராகரிப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் கருத்துக்கணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் சாதாரணமாக இதனை மேற்கொள்ள முடியாது என்றார்.




முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுமளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது- எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு