17,May 2024 (Fri)
  
CH
SRILANKANEWS

இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

இலங்கையில் இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் 29.01.2024 நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கனமழையால் பாரிய அளவில் மரக்கறி பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும்.



சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை பயிரிட்டனர். ஆனால் அவை மழையால் அழிந்துவிட்டன. ஆனால், விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய “நெட் ஹவுஸ்’களில் பயிர் செய்தததால், ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன.

இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும். 2024 ஆம் ஆண்டில், நமது தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். பெரிய வெங்காய பயிர்ச் செய்கையுடன், சின்ன வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. மொனராகலை தெலுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மொரகொல்லாகம,


நியந்தகம ஆகிய இடங்களில் சின்ன வெங்காயச் செய்கையை பிரபலப்படுத்த தீர்மானித்துள்ளோம். இதேவேளை அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த வருடத்தில் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.






இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு