23,Jan 2026 (Fri)
  
CH
விளையாட்டு

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு 20 போட்டி தற்போது

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு 20 போட்டி, நியூஸிலாந்தின் வெலிங்டனில் உள்ள ஸ்கை அரங்கில் தற்போது இடம்பெற்று வருகிறது. 

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. 

இதன்படி, தற்போது முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர்வரை 8 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இதேவேளை, 5 இருபதுக்கு 20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 

அத்துடன், நியுஸிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை 3 போட்டிகளில் வெற்றிகொண்ட இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 




இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு 20 போட்டி தற்போது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு