இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
இன்று நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு,
01 - மென்சி சிபோ டிலாமினி – எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் Mr. Menzie Sipho Dlamini High Commissioner of the Kingdom of Eswatini
02 - ஸ்டெலுடா அர்ஹைர் – ருமேனியா தூதுவர் Ms. Steluta Arhire Ambassador of Romania
03 - அஸ்கர் பெஷிமோவ் – கிரிகிஸ் குடியரசின் தூதுவர் Mr. Askar Beshimov Ambassador of the Kyrgyz Republic
04 - ஷலர் கெல்டினசரோவ் – துர்க்மெனிஸ்தானின் தூதுவர் Mr. Shalar Geldynazarov Ambassador of Turkmenistan
வௌிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.
அதனையடுத்து இன்று நியமனம் பெற்ற உயர்ஸ்தானிகரும் தூதுவர்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
0 Comments
No Comments Here ..