17,May 2024 (Fri)
  
CH
WORLDNEWS

உயிரை பறிக்கும் பூஞ்சை நோய் மீண்டும் பரவல்!

அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.


2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது. 


இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


அதாவது அமெரிக்காவின் வொஷிங்டனில் கடந்த மாதம் ஒருவருக்கு ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதே சியாட்டில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 


தற்போது வரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ‛கேண்டிடா ஆரிஸ் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் கூட மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு அந்த பூஞ்சை தொற்றின் வீரியம் தான் காரணமாகும். அதாவது ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது. 


மேலும் அதிக இறப்பு சதவீதத்தை கொண்டுள்ளதோடு, எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதாம்.  இதனால் தான் சுகாதார நிபுணர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.மேலும் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதலில் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும். 


மேலும் உணவு குழாய், சுவாச குழாய்களை தாக்கும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் பாதிப்பதோடு, காது உள்பட பிற உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தும்.  மேலும் பாக்டீரியா தொற்று ஏற்படுவம் பிற அறிகுறிகளும் ஏற்படாலம். நோயின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அறிகுறியின் தாக்கமும் அதிகரிக்கும்.


மேலும் இந்த ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று கிருமி மனிதரின் தோலில் இருந்து கொண்டே இன்னொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது. இதன்மூலம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகாமலே மற்றவருக்கு நோய் கிருமியை அனுப்ப முடியும். 


மேலும் இந்த தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அவர்கள் இருக்கும் அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.  அவரை சந்திக்க செல்வோர் கவசஉடை அணிய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் அறைக்கு சென்று வந்தால் கிருமிநாசினியிட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.




உயிரை பறிக்கும் பூஞ்சை நோய் மீண்டும் பரவல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு