23,Nov 2024 (Sat)
  
CH
விளையாட்டு

ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்!

நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று (04) தொடங்கியது. கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் சதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 112 ஓட்டங்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


இன்று (05) 2 ஆவது நாள் ஆட்டம் ஆரம்பமாகியது. தொடர்ந்து விளையாடிய கேன் வில்லியம்சன் 118 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.


ஆனால், ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 340 பந்தில் 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 4 ஆவது டெஸ்ட் போட்டிதான். 4 ஆவது போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார்.


தொடர்ந்து விளையாடிய அவர் 240 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கிளென் பிளிப்ஸ் 39 ஓட்டங்களிலும் டேரில் மிட்செல் 34 ஓட்டங்களிலும் மேட் ஹென்ரி 9 பந்தில் 27 ஓட்டங்கள் எடுக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 511 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் நீல் பிராண்ட் 6 விக்கெட்களை எடுத்தார்.




ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு