பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் (Charls) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை தெரிவித்துள்ளது.
எந்த வகை புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
அண்மையில் வேறொரு சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது. புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அவர் நேற்று (5 பிப்ரவரி) தொடங்கியதாய் அரண்மனை சொன்னது. சிகிச்சைகளின் போது அவரின் பொதுக் கடைமைகள் ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
75 வயது மன்னர், சிகிச்சை குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்; கூடிய விரைவில் அனைத்துப் பொறுப்புகளிலும் மீண்டும் ஈடுபட ஆவலுடன் மன்னர் இருப்பதாய் அரண்மனையின் அறிக்கை குறிப்பிட்டது.
ஊகங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் மன்னர் சார்ல்ஸ் தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி பகிர்ந்துகொள்ள முன்வந்ததாக அரண்மனை குறிப்பிட்டது.
0 Comments
No Comments Here ..