12,May 2024 (Sun)
  
CH
SRILANKANEWS

மாணவர்களை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள்!

பாடசாலைகளைச் சுற்றி போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 4,983 பாடசாலைகளில் 4,876 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்தந்த பாடசாலைகளைச் சுற்றி போதைப் பொருள் விற்பனை செய்ததாக 517 பேரை பொலிஸார் கைது செய்தனர்.


பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம், போதைப்பொருள் உள்ளதாக இனங்காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர் சமூகத்தின் பங்களிப்புடன் 5,133 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த குழு உறுப்பினர்கள் அளித்த அறிக்கைகளின்படி, 4,876 பாடசாலைகளில் போதைப்பொருள் அபாயம் ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.


மேலும், 107 பாடசாலைகள் தொடர்பில் போதைப்பொருள் அபாயம் உள்ளதாக அக்குழுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் பாடசாலைகள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மாணவர்களை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு