13,May 2024 (Mon)
  
CH
SRILANKANEWS

எமது பயணத்தை நாமே தீர்மானிக்க வேண்டும்!

பொருளாதார பயங்கரவாதத்தாலயே இந்நாடு அழிந்தது. ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட நட்பு வட்டார அரசியலால் பொருளாதார பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. இதன் மூலம் நாடு மக்களின் வளங்களையும் உடமைகளையும் இழந்தது. கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் வெளிப்படைத் தன்மையுடனும், பாரபட்சமின்றியும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,இழந்த வளங்கள் மீண்டும் மீட்கப்பட்டு நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


வளங்களும் வருமானங்களும் சமனாக பகிர்ந்து செல்லும், இனம், மதம், சாதி, வர்க்கம், குலம், கட்சி, அந்தஸ்து என்ற பேதமின்றி நாம் கைகோர்த்து வளமான சௌபாக்கியமான தேசத்தை உருவாக்குவோம்.சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் நலன் கிட்டும், நலன் பகிர்ந்தளிக்கப்படும் புதிய வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாமனைவரும் கைகோர்ப்போம். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும், நாட்டு மக்கள் இந்த பயணத்திற்கு தயாரா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 82 ஆவது கட்டமாக,அக்மீமன இஹலகொட ஸ்ரீ சுமங்கலா மாதிரி கல்லூரி 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஜப்பானை அதிக கடன் சுமை கொண்டிருந்த நாடு என்று சொல்லலாம்.அந்த கடனை எடுத்து இலாபகரமான முதலீடுகளை செய்தனர்.ஜப்பான் கடன் எடுத்து கப்பல்கள் வருகை தராத துறைமுகங்கள்,விமானங்கள் வருகை தராத விமான நிலையங்கள்,


கிரிக்கெட் இல்லாத கிரிக்கெட் மைதானங்கள்,மாநாடுகள் நடக்காத மாநாட்டு மண்டபங்கள்,பெயர் பதிப்பதற்காக தாமரை கோபுரங்களை நிர்மானிக்கவில்லை.அவர்கள் தாம் பெற்ற கடனைச் செலுத்த முடியுமான நாட்டுக்கு நீடித்த அடைவுகளை பெற்றுத் தரும் ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளையே நிறுவினர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாங்களும் யுத்ததிற்கு முகம் கொடுத்து அதிலிருந்து விடுதலை பெற்ற ஓர் நாடாகும்.வியட்நாமும் யுத்தத்தை சந்தித்த நாடாகும்.வியட்நாமியப் படைகள் மற்றும் அவர்களின் கொரில்லா கூட்டாளிகளான வியட் காங் ஆகிய தரப்புகளிடம் அமெரிக்கா படைகள் தோல்வியடைந்தது.உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவ சக்தி படைத்த ஒரு நாடு,வியட்நாமிய கிளர்ச்சியாளர்களிடமும், வறிய தென்கிழக்காசிய தேசத்திடமும் அடிபணிந்தது. 1975 ஆம் ஆண்டு வியட்நாமை விட்டுச் செல்லும் நிலைக்கு அமெரிக்கா படைகள் தள்ளப்பட்டன.


எமது நாட்டில் திறந்த பொருளாதார கொள்கை 1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.1986 இல் வியட்நாமும் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியது.எமக்கு பின்னர் திறந்த பொருளாதாரத்திற்கு நுழைந்த வியட்நாம் இன்று கோடிக்கணக்கான நேரடி முதலீடுகளை பெற்று வருகிறது.எனது நினைவின் படி,வருடத்திற்கு 12 அல்லது 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடி அந்நிய முதலீடாக பெற்று வருகிறது. 


1980 இல் Samsung உற்பத்திசாலையை எங்கு நிறுவுவது என்ற போட்டி நிலவியது.இறுதியாக வியட்நாம் வெற்றி பெற்று,Samsung உற்பத்திசாலை வியட்நாமில் நிறுவப்பட்டது.இந்த உற்பத்திசாலையை கொண்டு வந்தமையினால் இன்று 130 இக்கும் அதிகமான இலத்திரனியல் கருவிகளை வியட்நாம் உற்பத்தி செய்கிறது.Technology Transfer இங்கு நடக்கிறது.


எமது நாடும் கட்டியெழுப்பப்பட வேண்டுமாக இருந்தால், வெற்று வீராப்பு பேசும் போது கரகோஷம் எழுப்பும் அரசியலில் இருந்து விடுபட்டு அடைவுகளைப் பெற்றுத் தரும் செயற்பாடுகளுக்குள் பிரவேசிக்க வேண்டும். எமது ஆட்சியில் இதன் முதற்கட்டமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவோம்.


களவும், திருட்டும், மோசடியும், ஊழலும் எமது நாட்டில் இல்லாமல் இருந்தால் எமது நாட்டுக்கு உதவ பல வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி இலங்கையர்கள் பலரும் இருக்கின்றனர்.


ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தின் கீழ்,நாட்டில் உள்ள தூதுவர்களின் பணிகளோடு மாதாந்தம் முன்னெடுக்க வேண்டிய பணிகளோடு இந்த கருமங்களும் உள்ளடக்கப்படும். அவ்வாறு செய்யாத தூதுவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். நாட்டு மக்களின் உயிருடன் விளையாட எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


1,800 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்கும் இஹலகொட சுமங்கல பாடசாலையில் ஒரு கணினி(Desktop)கூட இல்லை. வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக வெளிநாட்டு பயணங்களுக்கு மேலும் 200 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்களை நாம் அடையாளப்படுத்த வேண்டும். என்றாலும் அவ்வாறானதொன்று நடப்பதாக தெரியவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.




எமது பயணத்தை நாமே தீர்மானிக்க வேண்டும்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு