11,May 2024 (Sat)
  
CH
SRILANKANEWS

மேல் மாகாணத்தை சுற்றிவளைத்த பொலிஸார்!

இன்று (18) மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கைக்காக 2,253 பொலிஸ் அதிகாரிகள், 1,112 இராணுவத்தினர் மற்றும் 219 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபர் திரு தேஸபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 1,061 பேர் கைது செய்யப்பட்துடன், 11 வாகனங்கள் மற்றும் குற்றங்களுக்காக தேடப்பட்ட 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.


வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பல கூரிய ஆயுதங்கள் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களின் அளவுகள் பின்வருமாறு.

வாள்கள் 06

மன்னா 01

கத்தி 01

தடை செய்யப்பட்ட கத்திகள் 02

322 கிராம் ஹெராயின்

111 கிராம் ஐஸ்

160 கிராம் கஞ்சா

13 கிராம் ஏஸ்

21,750 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம்

855 சட்டவிரோத சிகரெட்டுகள்




மேல் மாகாணத்தை சுற்றிவளைத்த பொலிஸார்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு