22,May 2025 (Thu)
  
CH
SRILANKANEWS

அமைச்சர்களை புறக்கணிக்கும் இலங்கை வங்கியின் பிரதானிகள்!

KIU போன்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டியில்லா கடன் வசதி வழங்கப்பட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும்,இன்னும் இதற்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை. அரச வங்கிகளிடம் இருந்து உகந்த பதில் கிடைக்கவில்லை. கல்வி அமைச்சர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தும் இந்தக் கடன் வசதிக்கு இந்த வங்கிகள் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) மீண்டும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


KIU நிர்வாகத்தினரின் கூற்றுப் படி,கல்வி அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இலங்கை வங்கி வட்டியில்லா கடன்களுக்கு இன்னும் உத்தரவாதம் வழங்காமையினால், இந்தக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஜனாதிபதி செயலகம்,கல்வி அமைச்சரின் அறிவுறுத்தல்களை கூட இலங்கை வங்கி ஏற்றுக்கொள்ளாதவாறு நடந்து கொண்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து மீண்டும் கவனம் செலுத்துங்கள்.  nஇலங்கை வங்கியால் இந்த கடன் வசதிகளை வழங்க முடியாவிட்டால், மற்றுமொரு அரச வங்கியுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.


அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர். இவர்களது பெயர் பட்டியல் கூட சமர்ப்பிக்கப்படாத நிலையில், மாணவர்களின் கல்விக்கு நடவடிக்கைகளுக்கு தேவையான கடன் வசதிகள் வழங்காமையை ஏற்க முடியாது.  அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத தரப்பினரை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.




அமைச்சர்களை புறக்கணிக்கும் இலங்கை வங்கியின் பிரதானிகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு