வெப்பமான வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (22) வெப்பச் சுட்டெண் அதிகமாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, நிலவும் வெப்பமான வானிலையுடன் சிறுவர்களிடையே தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சிறுவர்கள் சூரிய ஒளியில் உலாவுவதை மட்டுப்படுத்தப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..