13,May 2024 (Mon)
  
CH
SRILANKANEWS

ஆபத்துக்கு கொண்டு செல்லும் அறுவை சிகிச்சைகள்!

பயிற்சி பெற்ற மருத்துவரின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு கூட ஆபத்தாகிவிடும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தகுதிகள் அற்ற பல வைத்தியர்கள் இத்துறையில் பணியாற்றி வருவதாக நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், வைத்து வெளிப்படுத்தினர்.

தகுதியற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு தௌிவுப்படுத்துவதற்காக சங்கத்தின் வைத்திய நிபுணர் குழுவொன்று நேற்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதேவேளை, அண்மையில் கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வயிற்றில் படிந்திருந்த 13.5 லீற்றர் கொழுப்பை அகற்றும் சத்திரசிகிச்சையானது உயிருக்கு ஆபத்தான சத்திரசிகிச்சை எனவும் வைத்தியர்கள் இதன்போது வெளிப்படுத்தியுள்ளனர்.


அங்கு உரையாற்றிய சங்கத்தின் வைத்திய நிபுணர் கலாநிதி அமில ஷசங்க ரத்நாயக்க,


“கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டதாக செய்தி ஒன்று வந்தது. அந்தச் செய்தியில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 62 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 13.5 லீட்டர் கொழுப்பை அகற்றியிருந்தார். இந்த மாதிரி அறுவை சிகிச்சையில் 8 லீட்டருக்கு மேல் அகற்றப்பட மாட்டாது .காரணம் அது உயிருக்கு ஆபத்தானது. அது இவ்வாறு குறைக்கப்படும் அறுவை சிகிச்சை அல்ல. அது உடல் வடிவத்தை மீண்டும் பெறும் சிகிச்சையாகும். குறித்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு அந்த நோயாளியின் நிலைமை மிகவும் மோசமாகி மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்றார்.




ஆபத்துக்கு கொண்டு செல்லும் அறுவை சிகிச்சைகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு