10,Jun 2026 (Wed)
  
CH
இலங்கை செய்தி

மக்களுக்கு உள்ள பொறுப்பு - துமிந்த திஸாநாயக்க

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அதனை நிறைவேற்றக்கூடிய அரசியல் கட்சியை அதிகாரத்தில் அமர்த்த வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

 

அநுராதபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர், இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.

 

ஏப்ரல் மாதம் இறுதியில் பொதுத்தேர்தல் இடம்பெறக்கூடிய நிலை உள்ளது.

 

அவ்வாறாயின் தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதற்கு முன்னர் மக்களுக்கான சேவையை வழங்குவதற்கு இன்னும் ஒரு மாதக்காலப்பகுதியே எஞ்சியிருக்கின்றது.

 

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

 

தேர்தல் காலங்களில் சிலர் வந்து பல வாக்குறுதிகளை வழங்கி செல்வார்கள்.

 

ஆனால் தேர்தலுக்கு பின்னர் அதனை நிறைவேற்ற மாட்;டார்கள்.

 

நாட்டின் பொதுத்தேரதல் தாம் விரும்பும் கட்சிக்கான அதிகாரத்தை வழங்கும் சந்தர்ப்பமாகும்.

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்ந்த கூட்டணிக்கு அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்





மக்களுக்கு உள்ள பொறுப்பு - துமிந்த திஸாநாயக்க

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு