யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று (28) மற்றும் நாளை (29) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இன்று (28) மற்றும் நாளை(29) ஆகிய இரு தினங்களும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அதேசமயம் நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..