சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் சாந்தனின் மரணம் தொடர்பில் வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் சட்டத்தரணி புகழேந்தி. மேலும், ”ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்படவேண்டும். அண்ணன் சாந்தன் விட்டுச்சென்றுள்ள இந்த செய்தியானது உலகத்தில் கொடுமைகளை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசு அனுமதி வழங்கியும் கூட இந்திய அரசினால் சாந்தன் தனது தாய்நாட்டுக்கு அனுப்பப்படாமல் மரணித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது.” என்றார்.
இவ்வாறான நிலையில் சாந்தனின் மரணத்தின் பின்னணி குறித்தும், சிறப்பு முகாம்களில் இலங்கை அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும், இந்திய அரசின் சட்டம் எவ்வாறான தாக்கங்களை உருவாக்கின்றது என்பது தொடர்பிலும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார் என மே 17 இயக்கத்தின் நிறுவுனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சாந்தன் மரணம் குறித்து திருமுருகன் காந்தி மேலும் தெரிவித்துள்ளதாவது, ”எது நடந்துவிடக்கூடாது என அச்சப்பட்டோமோ அது நடந்துவிட்டது. தோழர் சாந்தன் இயற்கையெய்திய செய்தி துயரமான நாளாக்கிவிட்டது. சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலும், தாயை சந்திக்காமலும் விடைபெற்றுள்ளார். இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார். வேலூர் சிறையில் அவரைச் சந்தித்துள்ளேன். துயரமும், அவநம்பிக்கையும் சூழ்ந்த நிலையில் மிக அமைதி தோய்ந்த அவரது முகம் நினைவில் என்றும் நிற்கும். 2018 ஆகஸ்டில் சந்தித்த சமயத்தில் அன்றய அதிமுக அரசின் முடிவால் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. நாங்கள் வெளியே போய்விடுவோம், வெளியே உங்கள் உடல்நலம் பற்றி சொல்கிறோம்’ என்றார்.
0 Comments
No Comments Here ..