03,Dec 2024 (Tue)
  
CH
SRILANKANEWS

யாழின் மூன்று தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன. அதற்காக இந்திய அரசு 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய தீவுகளுக்கு மார்ச் 2025க்குள் மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

காற்றாலை மூலம் 530 கிலோவோட், சூரிய சக்தி மூலம் 1700 கிலோவோட், மின்சார செல்கள் மூலம் 2400 கிலோவோட் மற்றும் டீசலில் இருந்து 2500 கிலோவோட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திட்டம் "USOLAR" நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.




யாழின் மூன்று தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு