கடுவெல - மாலம்பே பிரதான வீதியில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். கடுவெல நகரசபைக்கு முன்பாக கடுவெலயிலிருந்து மாலம்பே செல்லும் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மணமக்களை ஏற்றிச் சென்ற டிஃபென்டர் வாகனம் ஒன்று எதிரில் வந்த வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய டிஃபென்டர் வாகனத்தின் சாரதி, மணமக்களை இடைநடுவே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த டிஃபென்டர் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..