22,May 2025 (Thu)
  
CH
SRILANKANEWS

அரச சேவைக்கு புதிய பொறிமுறை!

அரசாங்க சேவையில் சர்ச்சைகளைத் தடுப்பதற்கும் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபையின் பிரதம செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களின் தலைவர் ஆகியோருக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்டில் உயர்தர அரச சேவையை கட்டியெழுப்புவது மற்றும் பணியிட ஒத்துழைப்பின் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்த பொறிமுறையானது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


அரச சேவையில் சர்ச்சைகளைத் தடுப்பதற்கும் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் முன்மொழியப்பட்ட பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவின்படி இந்த சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உத்தேச புதிய பொறிமுறையானது முழு அரச சேவையிலும் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இது பணியிடங்கள் மற்றும் தேசிய மட்டம் ஆகிய மூன்று நிலைகளில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவுடன் சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பல பணியிடங்களில் இந்த வழிமுறை ஏற்கனவே முன்னோடி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்களுக்குள் உள்ள ஊழியர் முறுகல்களை தீர்ப்பதற்கும் முகாமை சேவைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பணியிட மறுசீரமைப்பின் மூலம் பொது சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதும் பொது சேவையின் தரத்தை அதிகரிப்பதும் இந்த பொறிமுறையை செயல்படுத்துவதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.




அரச சேவைக்கு புதிய பொறிமுறை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு