நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் தமது எரிபொருட்களில் விலைகளை திருத்தியுள்ளன. அதன்படி, சிபெட்கோ தமது எரிபொருட்களில் விலைகளில் பின்வருமாறு திருத்தியமைத்துள்ளது.
95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும்.
92 ரக பெற்றோல், மற்றும் ஒட்டோ டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் 371 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் 363 ரூபாவாகவும் திருத்தப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிபெட்கோ விலை திருத்தத்திற்கு ஒத்ததாக தமது லங்கா ஐஓசி நிறுவனம் தமது விலைத் திருத்ததை மேற்கொண்டுள்ளது. சினோபெக் எரிபொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு...
ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
92 ஒக்டேன் லீற்றர் பெற்றோல் மற்றும் ஒடோ டீசலின் விலையில் நிறுவனம் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
சினோபெக் 92 ரக பெற்றோல் லீற்றர் 368 ரூபாவாகவும், சினோபெக் ஒட்டோ டீசல் லீற்றர் 360 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..