02,Feb 2025 (Sun)
  
CH
SRILANKANEWS

வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் வௌிப்படுத்திய ஜனாதிபதி!

எதிர்காலத்தில் ​வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சுருங்கியிருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அது சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடையும் என்றார். மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.




வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் வௌிப்படுத்திய ஜனாதிபதி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு