ஸ்ரீமத் பகவத் கீதையின் பிரதி இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது. 2024 மார்ச் 01 ஆம் திகதி முதல் 2024 மார்ச் 4 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்ற 4 நாட்கள் கொண்ட சர்வதேச கீதைப் பெருவிழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக, குருக்ஷேத்ர மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளான கீதா மன்ஷி சுவாமி கியானந்த ஜி, சுவாமி குருஷரானந்த ஜி உள்ளிட்ட சுமார் 100 பேர் கொண்ட தூதுக்குழுவினர் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் குறிப்பிடுகையில், பகவத் கீதை பாரதத்துக்கு மாத்திரமல்லாமல் முழு மனித வர்க்கத்தினருக்குமான பெறுமதிவாய்ந்த நூலாகும் எனத் தெரிவித்தார். பகவத் கீதையின் செய்திகளை அனைத்து மனிதர்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் தற்பொழுது ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச கீதைப் பெருவிழாவின் ஐந்தாவது விழா இந்தியாவின் ஹரியானா அரசின் குருக்ஷேத்ர மேம்பாட்டு வாரியத்துடன் (KDB), இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுவாமி விவேகானந்த கலாசார நிலையத்துடன் இணைந்து இலங்கையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவு மற்றும் இலங்கையின் சுமார் 30 சமய மற்றும் சமூக அமைப்புகள் 30 ஆதரவு வழங்கின.

.jpeg)
0 Comments
No Comments Here ..