மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்திற்கான பாராளுமன்ற ஒன்றியம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் போது, ஒன்றியத்தின் தலைவராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா, நயனா வாசலகே மற்றும் உதயகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். இவ் அங்குராட்பன நிகழ்வில் பல கட்சிகளினது தலைவர்களும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பாராளுமன்றத்திற்குள், பல குழுக்கள் மற்றும் ஒன்றியங்கள் இயங்கி வருகின்றன. எனினும், அவ்வாறு இயங்குகின்ற எந்த ஒன்றிலும் நேரடியாக மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்படுவது மிக குறைந்தமட்டத்திலேயே உள்ளது. அதனால், மலையக பெருந்தோட்ட சமூகத்தின் எதிர்காலம் தொடர்பான, கொள்கைவகுப்புக்கள் மற்றும் செயற்திட்டங்களை உருவாக்குதல் போன்றன இடம்பெறுவது இல்லை.
இவ் இடைவெளியை நீக்கும் வகையில், நேரடியாக மலையக பெருந்தோட்ட சமூகத்தை இலக்காக கொண்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தில் இவ் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது.
0 Comments
No Comments Here ..