10,May 2024 (Fri)
  
CH
SRILANKANEWS

தெற்கில் பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க விசேட திட்டம்!

கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார். மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நேற்று (13) சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்ததுடன், காலி மற்றும் எல்பிட்டிய பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.


இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்ற அறிக்கைப் பிரிவு, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு, சமூகப் பொலிஸ் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் அழைத்து இக்குற்றங்களைத் தீர்ப்பதில் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும், எவ்வாறு ஒருவருக்கொருவர் ஒருங்கிணைத்தல், தகவல்களைப் பரிமாறிக்கொள்வது என்பன தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விரைவில் வெளிக்கொணர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.




தெற்கில் பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க விசேட திட்டம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு