10,May 2024 (Fri)
  
CH
SRILANKANEWS

றோயலை வீழ்த்தியது தோமஸ்!

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 47வது மஸ்டேங்ஸ் கிண்ண ஒருநாள் போட்டியில் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி வெற்றி பெற்றது. கொழும்பு ரோயல் கல்லூரியை 30 ஓட்டங்களால் வீழ்த்தி இந்த வெற்றியை அந்த அணி பெற்றுள்ளது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரோயல் கல்லூரி அணி 48.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.





றோயலை வீழ்த்தியது தோமஸ்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு