31,Jul 2025 (Thu)
  
CH
SRILANKANEWS

மரத்தால் வந்த வினை - ஒருவர் படுகொலை!

வெலிகம - உயன்கந்த பிரதேசத்தில் இன்று (16) காலை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 38 வயதான மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் மற்றும் சந்தேகநபர் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்தி வருகின்றனர். இன்று இரண்டு சுற்றுலா விடுதிகளுக்கு அண்டிய கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நபரை தாக்கியுள்ளனர். அப்போது, ​​சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியது தெரியவந்துள்ளது. வெலிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





மரத்தால் வந்த வினை - ஒருவர் படுகொலை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு