ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (19) காலை பெங்களூர் நோக்கி பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
புறப்பட்டு ஏறக்குறைய 40 நிமிடங்கள் வானில் பறந்த விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் பயணிகள் வேறு விமானங்கள் மூலம் பெங்களூர் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
0 Comments
No Comments Here ..