கைப்பற்றப்பட்ட 5,377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் அழிக்கப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுகர்வோர் அதிகார சபை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த லஞ்ச் சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், புத்தளத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வைத்து குறித்த லஞ்ச் சீட்டுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை நேற்று (19) அழிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
சட்டவிரோத பொலித்தீன் லஞ்ச் சீட்டுகள் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடுக்கப்பட்ட 12 வழக்குகளின் வழக்கு பொருட்களாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பொலித்தீன் லஞ்ச் சீட்டுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..