யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாவற்குழியைச் சேர்ந்த சிவநேசன் திவ்யன் என்ற 21 வயதானவரும் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த தேவன்கருணதாசா யூட் என்ற 36 வயதான நபருமே உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் இருவர் என மூவர் கடற்கரையில் நீராட சென்ற நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..