இங்கிலாந்தில் தமிழர்கள் அதிகம் வாழும் Bradford என்ற பகுதியில் பட்டப்பகலில் ஒரு இளைஞன் கடத்திச்செல்லப்பட்ட காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பு வாகனம் ஒன்றில் வந்த மூவர் வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இளைஞரை பலவந்தமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிய CCTV காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bradford இலுள்ள Westcroft Road என்ற வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையிஒல் கடத்திச் செல்லப்பட்டவர் பற்றியும், கடத்தியவர்கள் பற்றியுமான தகவல்களை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்கள். அதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக 28 வயதுள்ள ஒரு நபர் பொலிஸார் கைது செய்துள்ள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
0 Comments
No Comments Here ..