உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்து 7வது முறையாக பின்லாந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், 2024 ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் இரண்டாவது இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ள நிலையில், குறைந்த மக்கள் தொகை கொண்ட பல சிறிய நாடுகள் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னிலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் உலகின் மகிழ்ச்சியான 20 நாடுகளுக்குள் அடங்கவில்லை என்பதுடன், இந்த பட்டியலில் குவைத் மற்றும் கோஸ்டாரிகா ஆகியவை முதல் 20 நாடுகளில் உள்ளன. 143 நாடுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சி நாடுகளின் பட்டியலின்படி, இலங்கை 128வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், இந்தியா, பாகிஸ்தான், கென்யா, உகண்டா, துனிசியா ஆகிய நாடுகளும் இலங்கையை விட முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
World’s 20 happiest countries in 2024
1. Finland
2. Denmark
3. Iceland
4. Sweden
5. Israel
6. Netherlands
7. Norway
8. Luxembourg
9. Switzerland
10. Australia
11. New Zealand
12. Costa Rica
13. Kuwait
14. Austria
15. Canada
16. Belgium
17. Ireland
18. Czechia
19. Lithuania
20. United Kingdom
0 Comments
No Comments Here ..