இலங்கையில் புதிதாக தோல் தொற்று நோய் ஒன்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தோல் நோய் தொடர்பான மருத்துவ நிபுணர்கள் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டீனியா என பெயரிட்ப்பட்ட இந்த நோய் நிலமையானது தற்பொழுது தொற்று நோயாக பரவியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சகல வயதினருக்கும் இந்த நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, உடலின் எந்தவொரு பாகத்திலும் இந்த நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக கூறப்படுகிறது. வியர்வை அதிகளவில் படியக்கூடிய உடல் பகுதிகள் மற்றும் தலையில் இந்த நோய் தாக்கம் அதிகளவில் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நோய் தொற்று பரவுகை குறித்து இலங்கையில் கண்டறியப்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..