ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தகவின் மைத்துனரான கயான் தனுஷ்கவுக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான காணிக்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தடை விதித்துள்ளது. குறித்த நபரின் சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கமைய நுகேகொடையில் அவருக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான காணி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் குறித்த காணி தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பிணை கிடைத்துள்ள நிலையில் சந்தேகநபர் ஜப்பானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வெலே சுதாவின் நெருங்கிய சகாக்கள் இருவருக்கு நீதிமன்றம் 7 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தின் ஊடாக கொள்வு செய்யப்பட்டிருந்த இரண்டு சொகுசு வேன்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளுக்கு பின்னரே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இரண்டு சொகுசு வேன்களும் நீதிமன்றத்தால் நேற்று (23) அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாதாள உலக குழு ஒழிப்பு நடவடிக்கையின் போது மேலும் 11 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments
No Comments Here ..