பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் ஞாயிறு அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்புந்தி பகுதியில் இருந்து கிழக்கு – வடகிழக்கே 32 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.
0 Comments
No Comments Here ..