15,Jan 2025 (Wed)
  
CH
SRILANKANEWS

பதுளை மத்திய பஸ் நிலையத்தில் கத்திகுத்து!

பதுளை - முத்தெடுவேகம இடையே இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் லங்கம பேருந்தின் ஊழியர்களுக்கும் இடையில் இன்று (25) மாலை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது, காயமடைந்த லங்கம ஊழியர்கள் இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து இயங்கும் நேரம் குறித்த வாக்குவாதத்தின் போது, தனியார் பேருந்தின் சாரதி, லங்கம பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, லங்கம ஊழியர்கள் குழுவொன்று தனியார் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.





பதுளை மத்திய பஸ் நிலையத்தில் கத்திகுத்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு