27,Apr 2024 (Sat)
  
CH
SRILANKANEWS

சுற்றுலாத்துறை பாதிக்கும் பாதாள உலக செயற்பாடுகள்!

நாட்டில் நிலவும் சூழல்நிலை சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் நேரடியான தொடர்பை கொண்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

''பாதாள உலக செயற்பாடுகள் போன்ற பயங்கரமான சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பெந்தர, அஹுங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்றனர். இங்கு துப்பாக்கிச் சூடு சத்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த மக்கள் இனி இங்கு வரமாட்டார்கள். எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் மிகவும் அவசியம்." என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன், சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.





சுற்றுலாத்துறை பாதிக்கும் பாதாள உலக செயற்பாடுகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு