மின்சார கார்களின் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி பிரச்சினை தான் இதற்கு காரணம். எரிபொருள் விலையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பக்கம் திரும்புவது முக்கியம்.அதன்படி, மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு மின்சார கார்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும். பொது போக்குவரத்து சேவைகளுக்கு மின்சார வாகனங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு மின்சக்தி அமைச்சராக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதற்கு தாம் உழைத்ததை நினைவுகூர்ந்த ரணவக்க, அதே நேரத்தில் கூரைகளில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தற்போது அந்த முறையின் மூலம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சுமார் 700 மெகாவாட்ஸ் ஆகும். அடுத்த கட்டத்தில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி கார் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும். சூரிய சக்தியின் பயன்பாட்டை தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு விரிவுபடுத்துவது உடனடித் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்
0 Comments
No Comments Here ..