20,May 2024 (Mon)
  
CH
WORLDNEWS

ஐரோப்பிய வேலைவாய்ப்புக்காக இலங்கையர்கள் படும் துயரம்!

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றுள்ள இந்நாட்டு தொழிலாளர்கள் விசா பெற இந்தியாவுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக போலந்து மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட 15 நாடுகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்நாடுகளின் தூதரகங்கள் இந்நாட்டில் ஏற்படுத்தப்படாததால், அந்நாடுகளுக்கு வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் விசாவில் கையெழுத்திட இந்தியாவுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், அவர்களுக்கு மேலதிகமாக மூன்று இலட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.  மேலும், விசா தாமதமானால், பணி அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்படலாம் என்றும், அப்படியானால் விண்ணப்பதாரர் பெருமளவு பணத்தை இழக்க நேரிடும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.


2016ஆம் ஆண்டு முதல் திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக இருந்த போதும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் தற்போதைய வெளிவிவகார அமைச்சராலும் கூட இந்த பிரச்சினைக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையின் ஊடாக ஐந்து பில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.





ஐரோப்பிய வேலைவாய்ப்புக்காக இலங்கையர்கள் படும் துயரம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு