22,May 2025 (Thu)
  
CH
SRILANKANEWS

இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி!!

இலங்கையின் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக கூறப்பட்டாலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் இலங்கை இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,புத்தாண்டு காலம் நெருங்கினாலும் வழக்கம் போல் புத்தாண்டை கொண்டாட பணம் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறும் சூழலில் கூட ஏன் மக்களிடம் பணம் இல்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.


இலங்கையில் வறுமை நிலை தொடர்ச்சியாக 4 வருடங்களாக அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் 25 வீதம் இலங்கையர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் என்றும் உலக வங்கி அண்மையில் தெரிவித்தது. இவ்வாறான சூழலில், 2026 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகமாக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு